திருச்சி-சென்னை இடையே இன்று காலை, இரவு நேர விமான சேவை ரத்து

 


செம்பட்டு, 
திருச்சி விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டு விமான சேவைகளில் பெங்களூரு மற்றும் சென்னைக்கு மட்டும் விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று (புதன்கிழமை) காலை 11.15 மணிக்கு சென்னையில் இருந்து திருச்சி வந்து மீண்டும் சென்னை செல்லும் விமான சேவை மற்றும் இரவு 9.15 மணிக்கு திருச்சிக்கு வந்து சென்னை செல்லும் விமான சேவைகள் ரத்து செய்யப்படுவதாகவும், மதியம் நேர சேவை வழக்கம்போல் இயங்கும் என்றும், பெங்களூருவுக்கு மாலை நேர சேவையும் வழக்கம் போல் இயங்கும் என்று விமான நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

Previous Post Next Post