இன்று உலகம் முழுவதும் கோவிட் 19 காரணமாக லட்சகணக்கில் மக்கள் இறந்த வண்ணம் உள்ளனர்.
இந்தியாவிலும் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது இந்தியாவின் பல மாநிலங்களில் முழு ஊரடங்கில் உள்ளது
தமிழகத்திலும் கட்டுப்பாடுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ள இந்த நிலையில் சென்னை போன்ற பெரு நகரங்களில் ஊரடங்கு மற்றும் சமூக இடைவெளி கடைப்பிடிக்காமல் நாட்டிற்கு கேடு விளைவிக்கும் மக்கள் மத்தியில்
திருச்சி மாவட்டம், முசிறி அருகே கோமங்களம் பஞ்சாயத்தில் பஞ்சாயத்து தலைவர் உஷா ரமேஷ
அறிவுறுத்தலின் படி சிறிய கிராமத்து பொது ஜனங்களும் சமூக இடைவெளியுடன் கூட்டுறவு பொருட்களை வாங்கி சென்றனர்.
இவர்கள் போல் நாடு முழுவதும் செயல்பட்டால் கொரோனாவை முழுவதுமாக விரட்டி அடிக்க முடியும் என்று சொல்லாமல் சொல்லி விட்டனர் கிராமத்து மக்கள்.
Tags:
நம்ம ஊரு செய்திகள்