ஸ்டாலின் மனைவியால் தான் திமுக ஆட்சிக்கு வந்தது : சுப்ரமணியன் சாமி

 


தமிழகத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்தது. அதைத் தொடர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றார். அப்போது ஸ்டாலினின் மனைவி துர்கா கண்ணீர் சிந்திய புகைப்படம் இணையத்தில் வைரல் ஆனது. அதைத் தொடர்ந்து பலர் துர்கா ஸ்டாலினின் கடவுள் பக்தியால் தான் ஸ்டாலின் முதல்வரானார் என்று கூறிவந்தனர். இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமியும் இதே கருத்தை கூறியுள்ளார். 


இது தொடர்பாக அவர் அளித்த பெட்டியில், நீண்ட காலத்துக்குப் பின் தி.மு.க ஆட்சிக்கு வந்துள்ளது. அந்த கட்சிக்கு பெரிய மெஜாரிட்டியும் இல்லை.

அதனால், எல்லா விஷயங்களிலும் தீர்க்கமாகவும், தெளிவாகவும் செயல்பட வேண்டும். இந்த விஷயத்தில் உள்நோக்கம் கொண்டு பள்ளி நிர்வாகத்தை நசுக்க அரசு நினைத்தால், ஆட்சியைக் கலைப்பதை தவிர வேறு வழியில்லை. கட்டாயம் அதை செய்து காட்டுவேன். தி.மு.கவுக்கு பின்புலமாக இந்த விஷயத்தில் திராவிடர் கழகம் தான் செயல்படுகிறது.

தி.மு.க ஆட்சி மிக சுலபமாக ஏற்பட்டு விடவில்லை. ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலினின் கடவுள் நம்பிக்கை, வழிபாடு போன்றவற்றின் பலனாகத் தான், ஸ்டாலினுக்கு முதல்வறாகும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதை அவர் நல்ல வழியில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளார். 

Post a Comment

Previous Post Next Post