திருச்சி நம்பர் 1 டோல்கேட் சுற்றுவட்டார பகுதிகளில் அத்தியாவசிய தேவையில்லை தவிர தேவையில்லாமல் மோட்டார் சைக்கிள்களில் சுற்றுபவர்களை கண்காணிப்பதற்காக கொள்ளிடம் நம்பர் 1 டோல்கேட் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நம்பர் 1 டோல்கேட் ரவுண்டானா பகுதியில் தேவையில்லாமல் மோட்டார் சைக்கிளில் சுற்றி திரிந்த நபர்களிடம், லால்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன், ‘கொரோனோ தொற்று பரவலை கட்டுப்படுத்த தமிழகஅரசு எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு கொடுத்து வீட்டிலேயே விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும். தடையை மீறி தேவையில்லாமல் வெளியே சுற்றும் நபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க நேரிடும்’ என்று எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தார்.
Tags:
நம்ம ஊரு செய்திகள்