தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும் - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

 


தமிழகத்தில் வெப்பசலனம் காரணமாக மழை ஆங்காங்கே பெய்து கொண்டு இருக்கிறது. அதிலும் கன்னியாகுமரி உள்பட சில இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.

அதன் தொடர்ச்சியாக, தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், நாளையும் (சனிக்கிழமை), நாளை மறுதினமும் (ஞாயிற்றுக்கிழமை) மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், கன்னியாகுமரி மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த மழைக்கு மத்தியில், தமிழகத்தில் இன்றும், நாளையும் சில மாவட்டங்களில் வெயில் அதிகரித்து காணப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி வரை அதிகரிக்கக்கூடும் என்று ஆய்வு மையத்தால் கூறப்பட்டு இருக்கிறது.

Post a Comment

Previous Post Next Post