கோவிட் 19 காரணமாக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் முழு ஊரடங்கு பிறப்பித்துள்ளனர்.
அந்த வகையில் தமிழ்நாடு முழுவதும் தற்போது கட்டுபாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது.
இதனால் சிறு முதல் பெறு வணிக நிறுவனங்கள் அனைத்தும் மூடிவைக்கப்பட்டுள்ளன. இன்று வேலைக்கு போனால்தான் நமக்கும் நம் குடும்பத்தாருக்கு சோறு என பல்வேறு மக்களும் இன்னும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றனர். மற்றும் சாலையோரத்தில் இருக்கு ஆதரவற்றவர்களுக்கும் திருச்சிக்கு தினசரி வந்து போகும் மக்களினால்தான் வயிறார வாய்ப்பு கிடைத்தது.
தற்போதோ ஊரடங்கினால் யாரும் வருவதில்லை.
ஆகவே சாலையோர மக்களும், கூலித் தொழிலாளர் குடும்பங்களும் பயன்பெறும் வகையில் துறையூர் ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் சார்பில் திருச்சியில், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சி கடைவீதி உள்ளிட்ட திருச்சி அனைத்து பகுதிகளிலும் அன்னதானம் நடத்தி வருகின்றனர்.
Tags:
நம்ம ஊரு செய்திகள்