தமிழகம் முழுவதும் கட்டுபாடுடன் கூடிய ஊரடங்கு இன்று மதியம் வரை இருந்து வந்தது. காலை சமூக இடைவெளி கடைபிடிக்காத கடைகளுக்கும், 10 மணிக்கு மேல் இயங்கிய கடைகளுக்கும் அபராதம் வசூலிக்கப்பட்டது.
தற்போது வரும் மே 24ம் தேதி முதல் தளர்வுகளற்ற முழு பொது முடக்கம் அமல்படுத்தப்படவுள்ளதாக தமிழக அரசு அறிவித்த நிலையில் மாலை 4 மணிக்கு மேல் திருப்பைஞ்ஞீலியில் சலூன் கடைகள் முதல் மளிகை கடைகள் என அனைத்து கடைகளும் திறக்கப்பட்டன.
இந்த அறிவிப்பு காலையில் வந்திருந்தால் அபராதம் செலுத்திய பணம் மிச்சமாயிருக்கும் என கடை உரிமையாளர்கள் புலம்பி வருகின்றனர்.
Tags:
நம்ம ஊரு செய்திகள்