நாடு முழுதும் 6,260 டன் ஆக்சிஜன் சப்ளை - மத்திய் அரசு


புதுடெல்லி,

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் இரண்டாவது அலை மக்களைப் பாதித்து வருகிறது. 

இந்தநிலையில்  கொரோனா நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன் சப்ளைக்கு, இந்திய ரெயில்வே நிர்வாகம், 'ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்' என்ற விரைவு சரக்கு ரெயில்களை, கடந்த ஏப்., 19 முதல் பயன்படுத்தி வருகிறது. இதுவரை, 100 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள், 396 'டேங்கர்'களில், மருத்துவப் பயன்பாட்டிற்கான 6,260 டன் திரவ ஆக்சிஜனை மாநிலங்களுக்கு எடுத்துச் சென்றுள்ளன. 

டெல்லி, 2,404 டன்; உத்தர பிரதேசம், 1,680 டன்; அரியானா, 939 டன்; மராட்டியம், 407 டன்; மத்திய பிரதேசம், 360 டன்; தெலுங்கானா, 123 டன்; கர்நாடகா, 120 டன்; ராஜஸ்தான், 40 டன் திரவ ஆக்சிஜனை பெற்றுள்ளன.நேற்று முன்தினம் முதன் முறையாக, ஜார்க்கண்டில் இருந்து, 120 டன்; ஒடிசாவில் இருந்து, 50 டன் திரவ ஆக்சிஜன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இந்திய ரெயில்வே தெரிவித்துள்ளது.


 

Post a Comment

Previous Post Next Post