தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 33 ஆயிரத்தை தாண்டியது

 


தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 33,658- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 303- பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 17,359- ஆக அதிகரித்துள்ளது.   தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 15 லட்சத்து 65 ஆயிரத்து 035- ஆக உள்ளது.  

சென்னையில் 6640- பேர் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்று பாதிப்பில் இருந்து இன்று குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 20 ஆயிரத்து 905-ஆகும்.  கொரோனா தொற்று பாதிப்பைக் கண்டறிய இன்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் எண்ணிக்கை 1 லட்சத்து 64 ஆயிரத்து 945

Post a Comment

Previous Post Next Post