2 சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்பல்லபுரம் ஊராட்சி ஊழியர் போக்சோ சட்டத்தில் கைது

 


லால்குடி அருகே 2 சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த பல்லபுரம் ஊராட்சி ஊழியரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-

திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த பல்லபுரம் ஊராட்சியில் கிளார்க் ஆக வேலை பார்த்து வருபவர் சந்திரசேகர்(வயது 53). இவர் அதே ஊராட்சியில் மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள தனது வீட்டில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.

இந்தநிலையில் நேற்று மதியம் அந்த கிராமத்தை சேர்ந்த 9 வயது சிறுமியும், 6 வயது சிறுமியும் தின்பண்டம் வாங்க சந்திரசேகரின் பெட்டிக்கடைக்கு சென்றனர். அங்கு அந்த சிறுமிகளிடமும் மிட்டாய் கொடுத்து ஆசை வார்த்தை கூறி கடைக்குள் அழைத்துள்ளார்.

பின்னர் அவர், 2 சிறுமிகளிடமும் தகாத முறையில் நடந்து பாலியல் துன்புறுத்தல் கொடுத்துள்ளார். இதனால் சிறுமிகள் வலியால் அழுதுள்ளனர். இதற்கிடையே குழந்தைகளை நீண்ட நேரம் காணாத பெற்றோர், அவர்களை தேடி சென்றனர்.

அப்போது, உடலில் காயங்களுடன் அழுது கொண்டு வந்த குழந்தைகளை பார்த்து பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் நடந்த விவரங்களை தங்கள் பெற்றோரிடம் கூறினர்

உடனே ஆத்திரம் அடைந்த அவர்கள், ஊராட்சி கிளார்க்கை தேடி சென்றனர். அதற்குள் அவர் அங்கிருந்து தப்பிவிட்டார். மேலும் இதுபோல் ஏற்கனவே அவர் ஒரு சிறுமியிடம் நடந்து கொண்டுள்ளது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து 2 சிறுமிகளையும் அவர்களின் பெற்றோர் சிகிச்சைக்காக லால்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்றனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் லால்குடி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனியம்மாள் வழக்குப்பதிவு செய்து ஊராட்சி கிளார்க் சந்திரசேகரை போக்சோ சட்டத்தில் கைது செய்தார்.


Post a Comment

Previous Post Next Post